ஆரணி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளின் குறைவு தீர்வு கூட்டம்.

ஆரணி, செப் 10. ஆரணி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர குறைதீர்வு நாள் கூட்டம் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.;

Update: 2024-09-10 17:22 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆரணி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர குறைதீர்வு நாள் கூட்டம் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆரணி பழைய பஸ் நிலையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக கட்டப்பட்ட கழிவறை திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் அதனை பூட்டியே வைத்துள்ளனர். மேலும் அங்கு மது அருந்தும் பாராக செயல்பட்டு வருகிறது அதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், வங்கிகளில் பணப்பரிமாற்றத்திற்கு மாற்றுத்திறனாளிகளுக்கென தனி வரிசை ஏற்படுத்த வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான கடனுதவி உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவித்தனர். இதில் வட்டாட்சியர் கௌரி, வட்ட வழங்கல் அலுவலர் மூர்த்தி, ஊரக வளர்ச்சி அலுவலர் தென்னரசு மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News