ஆரணி ஹோஸ்ட் அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா.
ஆரணி செப் 10. ஆரணி ஹோஸ்ட் அரிமா சங்கம் சார்பில் ஆர்.சி.எம் பள்ளி வளாகத்தில் பொதுக்குழு கூட்டம் மற்றும் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.;
ஆரணி ஹோஸ்ட் அரிமா சங்கம் சார்பில் ஆர்.சி.எம் பள்ளி வளாகத்தில் பொதுக்குழு கூட்டம் மற்றும் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. இதில் ஆரணி ஹோஸ்ட் அரிமா சங்க தலைவர் மோசஸ் தலைமை தாங்கினார் மேலும் இதில் அரிமா சங்கத்தின் கூட்டு மாவட்ட துணைத்தலைவர் எஸ்.மதியழகன், திருவண்ணாமலை முன்னாள் மாவட்ட ஆளுநர் வி.எஸ்.தளபதி, மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் வி.பி.உதயசூரியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இதில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர வாகனம் ஆரணியைச் சேர்ந்த பி.வாசு என்பவர் வழங்கினார். வழங்கப்பட்டது. மேலும் ஆசிரியர்களுக்கு அப்பு சில்க்ஸ் உரிமையாளர் இ.ராஜதுரை நினைவுப்பரிசுகளை வழங்கினார். வேட்டவலம் அரிமா சங்க நிர்வாகி ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதில் ஓய்வு பெற்ற வட்டார தொடக்கக்கல்வி அலுவலர் பொன்.சுப்பிரமணியன், அரிமா சங்க நிர்வாகிகள் எம்.மணிஷ்குமார், டி.தமிழ்ச்செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.. மேலும் இதில் அரிமா சங்க செயலாளர் எம்.முருகானந்த், பொருளாளர் கே.ஓ.பரசுராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.