தமிழகம் வளர்ச்சி அடைந்து வருகிறது: கனிமொழி எம்.பி., பேச்சு

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் தொழில்வளம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல துறைகளில் வளர்ச்சியடைந்துள்ளது என்று கனிமொழி எம்பி தெரிவித்தார்.

Update: 2024-09-11 04:09 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக துணைப்பொதுச்செயலாளரும் பாராளுமன்ற குழு தலைவருமான கனிமொழி எம்.பி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி கிழக்கு ஓன்றியம் மாதாநகர் சந்திப்பு, தாளமுத்துநகா் பேருந்துநிறுத்தம், அன்னை இந்திராநகர் பகுதி, ஹவுசிங்போர்டு பிள்ளையார் கோவில் அருகில், பண்டாரம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில் "நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக எனக்கு போட்டியிட தமிழக முதலமைச்சர் வாய்ப்பளித்ததின் மூலம் உங்களுடைய அன்பால் வாக்குகளை பெற்று இரண்டாவது முறையாக வெற்றி பெற்றேன். அனைவருக்கும் நன்றியை தொிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு தொியும் கலைஞர் ஆட்சி எப்படி நடந்தது என்று அதே வழியில் தளபதியார் ஆட்சி செய்து வருகிறார். தமிழகத்தின் உாிமைகளை விட்டுக்கொடுக்காமல் தொழில்வளம் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல வகையிலும் வளர்ச்சியடைந்துள்ளன. முதலமைச்சர் மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதுடன், பல்வேறு நாடுகளில் முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கி படித்த இளைஞர்களுக்கு வழங்கி வருகிறார். அதன்படி தான் பல்வேறு முதலீடுகளை கொண்டுவருவதற்காக முதலமைச்சர் வௌிநாடு சென்றுள்ளார். நமது மாவட்டத்திலும் 14000 கோடி முதலீட்டில் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை அமையவுள்ளது. அதன் மூலம் நம்முடைய பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத திட்டமான காலை உணவு திட்டத்தை அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் வழங்கி கல்வியின் தரத்தை உயர்த்தி வருகிறோம். முதலமைச்சரின் ஆட்சிக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளித்து வருகிறீர்கள் உங்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டின் உாிமைக்காக குரல்கொடுப்பேன் என்று பேசினாா். கனிமொழி எம்.பி நன்றி தொிவிக்க சென்ற இடங்களில் பொதுமக்கள் மலர்தூவியும் பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனா். பல தரப்பினர் கொடுத்த கோாிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டு கேள்விகளுக்கும் பதிலளித்தார். நன்றி அறிவிப்பு நிகழ்வுக்கு வந்த கனிமொழி கையை பிடித்து மூதாட்டி ஓருவர் முத்தமிட்டாா். எல்லா கேள்விகளுக்கும் புன்கையோடு பதிலளித்து நமக்கான முதலமைச்சர் தளபதியார் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லா நன்மைகள் கிடைக்கும் என்று தொிவித்தார். நிகழ்ச்சியில் சண்முகையா எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பொியசாமி, முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின், ஓன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சரவணக்குமார், தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, துணை அமைப்பாளர் ஜீவா, தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தங்கமாாிமுத்து, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் ரெங்கசாமி, பிளோமின்ராஜ், மைக்கேல்ராஜ், ஓன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ்பாலன், ஆனந்தி, தொம்மை சேவியர், தொண்டரணி துணை அமைப்பாளர் கண்ணன், பகுதி செயலாளர் சிவக்குமாா்,உள்பட பலர் கலந்து கொண்டனர்

Similar News