மேற்குஆரணி விவசாயிகள் மானிய திட்டங்களுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
ஆரணி, செப் 11. மேற்கு ஆரணி வட்டாரத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் வழங்கப்படும் மானிய திட்டங்களுக்கு பயனாளிகள் தேர்வு நடைபெற்ற வருவதை முன்னிட்டு விவசாயிகள் மானிய திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று வேளாண் துறை அதிகாரி தெரிவித்தார்.;
மேற்கு ஆரணி வட்டாரத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் வழங்கப்படும் மானிய திட்டங்களுக்கு பயனாளிகள் தேர்வு நடைபெற்ற வருவதை முன்னிட்டு விவசாயிகள் மானிய திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று வேளாண் துறை அதிகாரி தெரிவித்தார். மேலும் மேற்குஆரணி தோட்டக்கலை உதவிஇயக்குநர் ஆ.பவ்யா தெரிவித்ததாவது, 2024 -25 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மேல்நகர், அத்திமலைபட்டு, பாளையம், அழகு சேனை, மலையம்பட்டு, சதுப்பேரிபாளையம், தெள்ளூர் மற்றும் கரிப்பூர் ஆகிய 8 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பழச் செடி தொகுப்புகள் பரப்பு விரிவாக்கத்திற்கான பழ மரக்கன்றுகள், மற்றும் வெண்டை விதைகள் மானியத்தில் மேற்குறிப்பிட்ட 8 கிராமங்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் பழச்செடி தொகுப்பு (கொய்யா-1, சப்போட்டா-1 பப்பாளி-1 பெருநெல்லி-1 சீதா-1) 4 செடிகள் அடங்கிய தொகுப்பு மொத்த விலை ரூபாய் 200, அரசு மானியம் ரூபாய் 150 மற்றும் விவசாயின் பங்குத்தொகை ரூபாய் 50 என வழங்கப்படுகிறது. மேலும் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து தளை தொகுப்பு (வாழை-1, கருவேப்பிலை-1 பப்பாளி-1, முருங்கை-1) அடங்கிய தொகுப்பு மொத்த விலை ரூபாய் 60, அரசு மானியம் ரூபாய் 45 மற்றும் விவசாயின் பங்குத்தொகை ரூபாய் 15 என வழங்கப்படுகிறது. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பழ மரக்கன்றுகள், காய்கறி விதைகள், காய்கறி நாற்றுகள் மானியத்தில் வழங்கப்படுகிறது. மாடி தோட்டத்தளைகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. நுண்ணீர் பாசன திட்டத்தில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மற்றும் 75% மானியத்தில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் மேற்குஆரணி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் வந்து அல்லது tnhorticulture.tn.in என்ற இணையதளத்தின் மூலம் அல்லது உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா நகல், ஆதார் நகல், குடும்ப அட்டை, 2 போட்டோ ஆகிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும். என்று மேற்குஆரணி தோட்டக்கலை உதவி இயக்குநர் ஆ.பவ்யா தெரிவித்தார். தெரிவித்தனர்.