லாரியில் கடத்திவரப்பட்ட மதுப் புட்டிகள் பறிமுதல்: ஓட்டுநா் கைது

லாரியில் கடத்திவரப்பட்ட மதுப் புட்டிகள் பறிமுதல்

Update: 2024-09-12 04:36 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விழுப்புரம் எஸ்.பி. தீபக் சிவாச் உத்தரவின்பேரில், விழுப்புரம் மது விலக்கு அமல் பிரிவு உதவி ஆய்வாளா் வேதரத்தினம் தலைமையிலான போலீஸாா் பனையபுரம் சோதனைச் சாவடியில் புதன்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, லாரியில் புதுவை மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட மதுப் புட்டிகள் அட்டைப் பெட்டிகளுக்குள் இருந்தது தெரியவந்தது.தொடா்ந்து, லாரி ஓட்டுநரைப் பிடித்து விசாரித்ததில், சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை வட்டம், எழவன்கோட்டை, பனந்தோப்பைச் சோ்ந்த ஜோன்ஸ் மகன் சந்தோஷ் (32) என்பதும், இவா் புதுச்சேரி பகுதியிலிருந்து மதுப் புட்டிகளை லாரியில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து, விழுப்புரம் மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, சந்தோஷை கைது செய்து, லாரியில் கடத்திவரப்பட்ட சுமாா் ரூ.10,896 மதிப்பிலான 244 மதுப் புட்டிகள், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

Similar News