தேசிய அளவிலான டேக்வான்டோ போட்டி

சின்னாளபட்டி அருகே அமைந்துள்ள தனியார் பள்ளியில் தேசிய அளவிலான டேக்வான்டோ போட்டியில் தமிழ் நாடு டேக்வன்டோ மாநில செயலாளர் செல்வமணி பேட்டி

Update: 2024-09-12 15:23 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் சின்னாளபட்டி அருகே தனியார் பள்ளியில் மத்திய அரசின் விளையாட்டுத்துறை சார்பில் கேலோ இந்தியா அஸ்மிதா டேக்வான்டா 2ம் நிலை போட்டிகள் நேற்று 11.09.2024 தொடங்கி மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதில் மஹாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு பாண்டிச்சேரி,‌ கோவா உள்ளிட்ட 11 மாநிலங்களிலிருந்து 360 டேக்வான்டோ வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். போட்டிகள் வயது மற்றும் எடை அடிப்படையிலும் நாக்அவுட் முறையில் நடைபெற்று வருகின்றது. தனித் திறன் போட்டிகளில் மகளிர் பிரிவில் மாணவிகள் பல்வேறு அட்டாக்குகள் செய்து அசத்தினார்கள். தொடர்ந்து சண்டை போட்டிகள் நடைபெற்றது. இதற்கு உள்விளையாட்டு அரங்கில் மேட்டுகள் அமைக்கப்பட்டு கேமராக்கள் பொருத்தப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் புள்ளிகள் உடனுக்குடன் எல் சி டி திரையில் வெளியிடப்பட்டன. இப்போட்டியின் இன்றைய துவக்க விழாவில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். தமிழ் நாடு டேக்வன்டோ மாநில செயலாளர் செல்வமணி, டேக்வன்டா திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு உள்ளிட்டோர் போட்டிகளின் ஏற்பாடுகளை செய்திருந்தனர். நடுவர்கள், பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு போட்டிகளை கண்டு களித்தனர்.

Similar News