மாவட்ட அளவில் பெண்களுக்கான ஹேன்ட்பால் விளையாட்டு போட்டி
முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவில் பெண்களுக்கான ஹேன்ட்பால் விளையாட்டு போட்டிகள் சின்னாளபட்டி சேரன் பள்ளியில் நடைபெற்றது
முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான ஹேன்ட்பால் போட்டிகள் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி சின்னாளபட்டி சேரன்வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11.09.24 முதல் 13.09.24 வரை நடைபெறுகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான ஹேன்ட்பால் போட்டிகள் நடைபெற்றது. விழாவிற்கு ஹேன்ட்பால் கழகத்தின் மாநில செயலாளர், சிவகுமார் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் திலகம், ஹேன்ட்பால் கழகத்தின் மாவட்ட தலைவர் திரைப்பட நடிகர் சமயநாதன், மாவட்ட பொருளாளர் மகாதேவன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிராஜா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் அசோக்குமார் வரவேற்று பேசினார். 25க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த மாணவிகளுக்கான ஹேன்ட்பால் அணிகள் பங்கேற்றனர். திண்டுக்கல் ஜி.டி.என்.கல்லூரி மற்றும் பான்செக்கர்ஸ் கல்லூரி மாணவிகள் மோதிய முதல் போட்டியை ஹேன்ட்பால் கழகத்தின் மாநில செயலாளர் துவக்கி வைத்தார் இதுபோல திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ கல்லூரி அணிக்கும், புனித அந்தோனியார் கல்லூரிக்கும் நடைபெற்ற மாணவிகளுக்கான போட்டியை பள்ளி முதல்வர் துவக்கி வைத்தார். இதில் ஜிடிஎன். கல்லூரி அணியை பான்செக்கர்ஸ் கல்லூரி அணி 7க்கு 8 என்ற கோல் கணக்கில் வென்றது. இதுபோல பி.எஸ்.என்.ஏ கல்லூரிக்கும் புனித அந்தோனியார் கல்லூரிக்கும் நடைபெற்ற ஹேன்ட்பால் போட்டியில் பி.எஸ்.என்.ஏ. கல்லூரி அணி 18க்கு 2 என்ற கோல் கணக்கில் புனித அந்தோனியார் கல்லூரி அணி வெற்றது. முன்னதாக காலை விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள வந்த மாணவிகளின் வயது மற்றும் கல்வி சான்றிதழ்களை ஆசிரிய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்பு போட்டிகளில் பங்கேற்க செய்தனர்.