உயர்கல்வி சேர்வதற்கு உயர்வுக்கு படி என்ற விழிப்புணர்வு முகாம்!

அரசு செய்திகள்

Update: 2024-09-13 04:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளிக் கல்வி முடித்த மாணவர்களுக்கு, உயர்கல்வி சேருவதற்கு வழிகாட்டும் 'உயர்வுக்குப் படி' என்ற விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இந்த முகாமை, மாவட்ட ஆட்சியர் மு. அருணா தொடங்கி வைத்தார். மேல்நிலைக் கல்வி படித்த மாணவர்கள், உயர்கல்விக்குச் செல்லும் ஆர்வத்தைத் தூண்டவும், வழிகாட்டவும், இந் முகாமில், ஏராளமான கல்வி மேல்நிலைக் கல்வி படித்த மாணவர்கள், உயர்கல்விக்குச் செல்லும் ஆர்வத்தைத் தூண்டவும், வழிகாட்டவும், இந்த முகாமில், ஏராளமான கல்வி நிறுவனங்களின் அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.மேலும், அரசுத் துறைகளின் சார்பில் பல்வேறு அரங்குகளும் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்குத் தேவையான சான்றுகளைப் பெறும் வழிகாட்டும் அரங்குகளும் இருந்தன. செப். 18 மற்றும் 24ஆம் தேதிகளில் அறந்தாங்கி கோட்டத்திலும், செப். 20ஆம் தேதி புதுக்கோட்டை கோட்டத்திலும், செப். 18 மற்றும் 27 ஆம் தேதிகளில் இலுப்பூர் கோட்டத்திலும் இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன.நிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூ. சண்முகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜி. அமீர்பாஷா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் க. ஸ்ரீதர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மோ. மணிகண்டன், பெ. வேல்முருகன், மாவட்ட சமூக நல அலுவலர் கோ.ந. கோகுலப்பிரியா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் த. நந்தகுமார், மாவட்ட மனநல மருத்துவர் ரெ. கார்த்திக் தெய்வநாயகம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Similar News