மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு சங்க பணியாளர் குறைதீர்க்கும் முகாம்

கூட்டுறவு சங்க பணியாளர்கள் பணி சம்பந்தமான தங்களது பல்வேறு விதமான குறைகளை கோரிக்கைகளாக மனு அளித்தனர்

Update: 2024-09-13 06:22 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மதுரை குட்செட் தெருவில் உள்ள மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு சங்க பணியாளர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம்மு முகாமில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் பணி சம்பந்தமான தங்களது பல்வேறு விதமான குறைகளை கோரிக்கைகளாக மனு அளித்தனர். அந்த வகையில் தமிழ்நாடு அரசின் நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் சார்பாக மாநிலத் துணைத் தலைவர் செல்லத்துரை தலைமையில் மாவட்ட தலைவர் பாலமுருகன் மாவட்ட செயலாளர் சிவ பாண்டியன் மாவட்ட பொருளாளர் பாக்கியம் மாவட்ட அமைப்பாளர் செல்வம் மாநில துணை செயலாளர் அருணாச்சலம் உள்ளிட்டோர் மாவட்ட இணை பதிவாளர் குருமூர்த்தி,மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், துணைப் பதிவாளர் அமிர்தா ஆகியோர்களிடம் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். அம்மனுவில் பெண் பணியாளர்கள் மீது பாலியல் தொந்தரவு செய்து வரும் திருமங்கலம் ஏ பி சி எம் எஸ் பொறுப்பு மேலாளர் முருகேசன் மீது பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளித்தும் விசாரணை அலுவலகம் வாக்குமூலம் அளித்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் மாவட்ட கூட்டுறவு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை, பெண் பணியாளர்கள் பணியாற்றும் அங்காடிகளுக்கு மாலை 5 மணிக்குள் குடிமைப் பொருட்கள் நகர்வு செய்யப்பட வேண்டும்,காலி கோணிப்பைகள் அங்காடிகளில் அதிகம் தேங்கியுள்ளது அதனை முதன்மை சங்கத்தால் கொள்முதல் செய்யப்பட்டு ஒப்புதல் கடிதம் வழங்கப்பட வேண்டும்,கட்டுப்பாடற்ற பொருட்கள் தரமானதாகவும் விலை குறைவாகவும் விற்பனையாளர்களிடம் தேவைப்பட்டியல் பெற்று விற்பனை தொகைக்கு ஏற்ப வழங்கப்பட வேண்டும் தீபாவளிக்கு விற்பனையாளர்கள் மூலம் நியாய விலை கடைகளில் பட்டாசு வழங்குவதை நிறுத்தப்பட வேண்டும், விற்பனை அவர்களுக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தது.

Similar News