ஆரணியில் அரிமா சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்.

ஆரணி, செப் 14. ஆரணி கார்னேஷன் பள்ளியில் அரிமா சங்கம், தி.மலை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, சங்க மூத்த உறுப்பினர் வி.கே.ஆர்.வெங்கடேசன் ஆகியோர் இணைந்து ஆரணி கார்னேஷன் பள்ளியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தினர்.

Update: 2024-09-14 14:48 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆரணி கார்னேஷன் பள்ளியில் அரிமா சங்கம், தி.மலை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, சங்க மூத்த உறுப்பினர் வி.கே.ஆர்.வெங்கடேசன் ஆகியோர் இணைந்து ஆரணி கார்னேஷன் பள்ளியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தினர். இதில் அரிமா சங்க தலைவர் மோசஸ் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் ஏ,எம்,முருகானந்த், பொருளாளர் கே.ஓ.பரசுராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் டி.தமிழ்ச்செல்வன், சந்திரசேகரன், எல்.சுகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இம்முகாமில் 165 பேர் கண் பரிசோதனை செய்தனர். இதில் 28 பேருக்கு கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 24பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

Similar News