திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று பிறந்தநாள்

திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று பிறந்தநாள்

Update: 2024-09-15 03:36 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்டத்துக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) 40-வது பிறந்த நாள் ஆகும். மா, பலா, வாழை என முக்கனிகள் விளைந்து, முத்திரை பதிக்கும் திண்டுக்கல். மலைகளின் இளவரசியான கொடைக்கானலை தன்னகத்தே கொண்ட திண்டுக்கல் மாவட்டம் இன்று 40 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மதுரை மாவட்டத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டை கிளவியாக இருந்த திண்டுக்கல் மாவட்டத்தை பிரித்து 1985ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தனி மாவட்டமாக அறிவித்து முதல் மாவட்ட ஆட்சியர் எம்.மாதவன் நம்பியாரை அறிவித்தார் அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆர். திண்டுக்கல் மாவட்டம் சில காலம் திண்டுக்கல் அண்ணா மாவட்டம் என்ற பெயராலும், சில காலம் காய்தே மில்லத் மாவட்டம் என்ற பெயராலும் மற்றும் மன்னர் திருமலை மாவட்டம் என்ற பெயராலும் அழைக்கப்பட்டன அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் மாநில அளவில் அதிக வருவாய் ஈட்டும் கோயிலாக உள்ளது.

Similar News