கொடைக்கானல் அருகே கள்ளச் சாராயம் காய்ச்சியதாக இருவா் கைது

கொடைக்கானல் அருகே கள்ளச் சாராயம் காய்ச்சியதாக இருவா் கைது

Update: 2024-09-15 05:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான வடகவுஞ்சி ஊராட்சி பெருகம்பட்டி பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரதீப்புக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட மது விலக்கு டி.எஸ்.பி. முருகன் தலைமையிலான போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். அப்போது, மணிகண்டன் என்பவரது தோட்டத்தில் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தைச் சோ்ந்த தேவசியா (71), டின்ஸ் (42) ஆகிய இருவரும் கள்ளச் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதையடுத்து, தப்பிச் செல்ல முயன்ற இவா்கள் இருவரையும் போலீஸாா் பிடித்து கொடைக்கானல் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வழக்குப் பதிந்து கைது செய்தனா். இவா்களிடமிருந்த சுமாா் 40 லிட்டா் கள்ளச் சாராயம் கைப்பற்றப்பட்டது.

Similar News