திருப்பூர் அருகே பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!

திருப்பூர் அருகே பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!

Update: 2024-09-16 11:17 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் அருகே பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம். திருப்பூர் நெருப்பெரிச்சல் ஜி என் கார்டன் பகுதியில் முத்துக்குமார் என்பவர் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று விடுமுறை தினம் என்பதால் நிறுவன ம் மூடப்பட்டு இருந்தது யாரும் வேலைக்கு வராத நிலையில் இரவு 11 மணிக்கு மேலாக பின்னலாடை நிறுவனத்தின் உட்பகுதியில் இருந்து புகை வெளியேறி உள்ளது இதனை கவனித்த காவலாளி உடனடியாக உரிமையாளர் முத்துக்குமார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த வடக்கு தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க முற்பட்டனர் ஆனால் நிறுவனம் முழுவதும் பனியன் துணிகள் உற்பத்தி செய்ய அடுக்கி வைக்கப்பட்டிருந்த காரணத்தால் மலமலவென பற்றி எரிய தொடங்கியது இதனை தொடர்ந்து திருப்பூர் தெற்கு, அவிநாசி மற்றும் ஊத்துக்குளி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 10க்கும் மேற்பட்ட தனியார் தண்ணிர் லாரிகள் உதவியுடன் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் ஏற்றுமதிக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பின்னல் ஆடைகள் பனியன் துணிகள் தையல் இயந்திரங்கள் என பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது இந்த சம்பவம் தொடர்பாக அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Similar News