மயானத்தை சிதிலம் செய்து தரைமட்டமாக்கிய நபர்கள் மீது புகார்

சாணார்பட்டி அருகே மயானத்தை சிதிலம் செய்து தரைமட்டமாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

Update: 2024-09-16 12:06 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் எமக்கலாபுரம் கிராமத்தை சேர்ந்தது வேலாம்பட்டி கிராமமாகும். இங்கு அறநூறுக்கும் மேற்பட்டோர் குடும்பங்களாக வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் உறவினர்கள் இறந்ததை நத்தம் மெயின் ரோட்டில் உள்ள துரைசாமி என்பவரது கிணறு அருகில் புதைத்து வருகின்றனர். இது அரசு புறம்போக்கு நிலம் ஆகும் இதில் கடந்த 60 ஆண்டுகளாக இறந்தவர்களை புதைத்து வருகின்றனர். இதன் அருகே உள்ள சண்முகவள்ளி அவரது கணவர் கண்ணன் மற்றும் மகள் தேசப்பிரியா ஆகியோரின் விவசாய நிலம் இருந்தது. தற்பொழுது அதை மனைகளாக பிரித்துப் போட்டு விற்பனை செய்ய தயாராகி உள்ளனர். சுடுகாடு அருகில் பிளாட் இருந்தால் விலை போகாது என கருதிய அக்குடும்பத்தினர் சுடுகாட்டை இடித்து தரைமட்டம் ஆக்கி பாதையாக்கி உள்ளனர். ஆகவே சுடுகாட்டை இடித்து நாசம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, மீண்டும் மயான இடத்தை மீட்டுத் தரும்படியும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Similar News