கொங்கராம்பட்டில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா.

ஆரணி, செப் 17. ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள கொங்கராம்பட்டில் பாரத பிரதமர் மோடி பிறந்த நாள் முன்னிட்டு ஆரணி தொகுதி பாஜக சார்பில் நரிக்குறவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும், உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடத்தினர்.

Update: 2024-09-17 08:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பாரத பிரதமர் நரேந்திரநோடி பிறந்த நாள் முன்னிட்டு ஆரணி தொகுதி பாஜக சார்பில் கண்ணமங்கலம் அருகே உள்ள கொங்கராம்பட்டு கூட்ரோடில் உள்ள நரிக்குறவர்களுக்கு இனி்ப்புகள் வழங்கப்பட்டது. பின்னர் பாஜக கட்சியில் ஆரணி சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி எண் 24 இல் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் பாஜக மத்திய நலத்திட்ட பிரிவு மாநில செயலாளரும், ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளருமான சைதை வ.சங்கர் தலைமை தாங்கினார். ஆரணி ஒன்றிய தலைவர் குணாநிதி, மாவட்டதுணைதலைவர் நித்யானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேட்டுஜி, கண்ணமங்கலம் நகர தலைவர் முத்துவேல், மாவட்டசெயலாளர் திருஞானம், ஓபிசி அணி மாவட்டசெயலாளர் மணிமாறன், ஆரணி வடக்கு இளைஞரணி பொதுச்செயலாளர் தாமோதரன், கொங்கராம்பட்டு கிளை தலைவர் சண்முகம், நகரதுணைத்தலைவர்கள் பாலாஜி, செந்தில், மத்திய நலத்திட்டபிரிவுஒன்றிய தலைவர் மண்ணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News