ஸ்ரீ கிருஷ்ணா நகர் ஒருங்கிணைந்த குடியிருப்போர் நல சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் துவக்கம்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்

Update: 2024-09-17 10:11 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
, கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் RMTC டிப்போ எதிரில் உள்ள கர்ணா ஹோட்டல் மாடியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிருஷ்ணாநகர், ஸ்ரீ மகாலக்ஷ்மி நகர், தனலட்சுமி நகர், சாரல்நகர், லட்சுமி நகர், பாலாஜி நகர், சிவபாலாஜி நகர், முத்தம்மன் நகர், ஜெய் நகர், வலம்புரி நகர், ஆகிய குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அனைத்து சங்கங்களும் இணைந்த ஸ்ரீ கிருஷ்ணா நகர் ஒருங்கிணைந்த குடியிருப்போர் நல சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் துவக்கப்பட்டு புதிய நிர்வாகிகளாக கீழ் கண்டவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவர் -திரு, C. சதாசிவம், செயலாளர் -திரு. ப, கலைச்செல்வன், பொருளாளர் -திரு, மணிகண்டேஸ்வரன், சட்ட ஆலோசகர்களாக -திரு A, முருகன், திரு. அம்மா. சந்திரசேகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் துணை தலைவர்கள், இணை, துணை செயலாளர்கள் ஆய்வு செய்து அறிவிக்கப்படுவார்கள் என முடிவு செய்யப்பட்டது. மேற்கண்ட நிர்வாகிகள் ஒவ்வொரு சங்க கூட்டங்களிலும் கலந்து கொண்டு மேலும் நிர்வாகிகள் தேர்வு செய்வார்கள் என முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு சங்கங்களில் இருந்தும் நான்கு பேர் ஒருங்கிணைந்த சங்கத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள் என முடிவு செய்யப்பட்டது.

Similar News