பாரத பிரதமர் பிறந்த நாளை முன்னிட்டு அன்பு கரங்கள் இல்லத்தில் அன்னதானம்.
பாரத பிரதமர் பிறந்த நாளை முன்னிட்டு அன்பு கரங்கள் இல்லத்தில் அன்னதானம்.
பாரத பிரதமர் பிறந்த நாளை முன்னிட்டு அன்பு கரங்கள் இல்லத்தில் அன்னதானம். பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது பிறந்த தினம் இன்று. தொடர்ந்து பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறி வருவதால்,நாடெங்கும் உள்ள மக்கள் இன்று பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, கரூர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில், கரூர் அடுத்த வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணி திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள அன்பு கரங்கள் இல்லத்தில் வசித்து வரும் ஆதரவற்றோர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி துணை தலைவர் மீனா, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில துணைத்தலைவர் மகுடபதி, மாவட்ட பொது செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் குணசேகரன், மாவட்ட துணை தலைவர்கள் செல்வம், சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் செல்வராஜ், கரூர் கிழக்கு ஒன்றிய தலைவர் சரவணகுமார், கரூர் மேற்கு நகர தலைவர் முருகேசன், க. பரமத்தி வடக்கு ஒன்றிய தலைவர் செல்வி பழனிச்சாமி, விவசாய அணி மாவட்ட தலைவர் அக்னீஸ்வரர் செல்வம், ஓபிசி அணி மாவட்ட தலைவர் வசந்த், இளைஞரணி மாவட்ட தலைவர் தீன சேனா, வழக்கறிஞர் பிரிவு உமாதேவி, வர்த்தகப் பிரிவு அருண்குமார், அரசு தொடர்பு பிரிவு சண்முகசுந்தரம், ஊடக பிரிவு ரவிச்சந்திரன், ராணுவ பிரிவு ரத்தினம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.