லிங்கத்தூர் அருகே டூவீலர்கள் மோதல். பயிற்சி மருத்துவர் உள்ளிட்ட இருவர் படுகாயம்.

லிங்கத்தூர் அருகே டூவீலர்கள் மோதல். பயிற்சி மருத்துவர் உள்ளிட்ட இருவர் படுகாயம்.

Update: 2024-09-17 12:33 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
லிங்கத்தூர் அருகே டூவீலர்கள் மோதல். பயிற்சி மருத்துவர் உள்ளிட்ட இருவர் படுகாயம். கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே உள்ள லிங்கத்தூர் புது தெருவை சேர்ந்தவர் சக்திவேல் வயது 35. இவர் கரூர் கிளைச் சிறையில் வார்டனாக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை மகாலிங்கம் வயது 62. இவர் செப்டம்பர் 16ஆம் தேதி காலை 7:30 மணி அளவில், கரூரிலிருந்து மணப்பாறை செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் லிங்கத்தூர் எல்லை பாதை பிரிவு சாலையில் செல்லும்போது, அதே சாலையில் கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, கொசூர், தந்திரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த நல்ல தம்பி மகன் டாக்டர் தர்மா வயது 25 என்பவர் ஓட்டிச் சென்ற மற்றொரு டூவீலர், மகாலிங்கம் ஓட்டி சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருவரும் வாகனத்துடன் கீழே விழுந்ததில் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மகாலிங்கத்தை கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும்,காயமடைந்த பயிற்சி டாக்டர் தர்மாவை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மகாலிங்கத்தின் மகன் ஜெயில் வார்டன் சக்திவேல் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பயிற்சி மருத்துவர் தர்மா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Similar News