ஆரணியில் வன்னியர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம்.

ஆரணி, செப் 17. இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிளுக்காக ஆரணியில் வன்னியர் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2024-09-17 14:00 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
வன்னியர்கள் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆரணியில் வன்னியர் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் அ.கருணாகரன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை பாமக மாவட்ட செயலாளர் ஆ.வேலாயுதம் துவக்கி வைத்தார். ஆரணி காமராஜர் சிலையில் இருந்து பெரிய கடை வீதி, சத்தியமூர்த்தி சாலை, மார்க்கெட் ரோடு வழியாக ஆரணி பழைய பஸ் நிலையம் அருகில் முடிந்தது. அங்கு உயிர் நீத்த தியாகிகள் படம் வைக்கப்பட்டிருந்த இடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர். கூட்டத்தில் முன்னாள் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சேவூர் ஆ.குமார் முன்னிலை வகித்தார். வன்னியர் சங்க நகர செயலாளர் ராஜாமணி அனைவரையும் வரவேற்றார், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட அமைப்பு தலைவர் ஏ.கே.ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் து.வடிவேல், மு.மெய்யழகன், சேவூர் கு.சிவா, பேராசிரியர் கே..சிவா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அரியப்பாடி பிச்சாண்டி, மாவட்ட நிர்வாகிகள் நகர செயலாளர்கள் சு.ரவிச்சந்திரன், சதீஷ்,குமார், ஒன்றிய செயலாளர்கள் தினேஷ், பெருமாள், சுரேஷ், கமல், ஒன்றியதலைவர்கள் ரவிவர்மன், சேவூர் பாபு, மகளிரணி நிரவாகிகள் ரேவதி, ஞானமமாள்செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News