நகைக்கடை உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்.

ஆரணி, செப் 18. ஆரணி நகர காவல் நிலையத்தில் தெருக்களில் கண்காணிப்பு கேமரா அமைக்க நகைக்கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

Update: 2024-09-18 17:47 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆரணி பெரியகடைவீதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் உள்ளது. இதனால் திருட்டு சம்பவங்கள் தடுப்பு நடவடிக்கைக்காக திருவண்ணாமலை எஸ்.பி உத்தரவின்பேரில் ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் ஏற்பாட்டின்பேரில் நகர காவல் நிலையத்தில் நகைக்கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆரணி நகர இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். மேலும் எஸ்.ஐக்கள் சுந்தரேசன், ஷாபுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பெரியகடைவீதியில் ஆங்காங்க கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு செய்து குறித்து விவாதித்தனர். மேலும் இதற்கு ஏற்படும் செலவினத்தொகையை நகைக்கடை உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர். இதில் நகைக்கடை உரிமையாளர்கள் ஏ.ஏழுமலை, செல்வராஜ், ஜி.கேசவன், உக்மிசந்த், வினோத், எஸ்.ஏ.விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Similar News