போக்குவரத்து கழகம் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
பேருந்தின் 2 படிக்கட்டுகளும் 2 கண்கள் போன்று இருக்க வேண்டுமென ஓட்டுநர்கள், நடத்துனர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்
மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமானது மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை ஆணையர் வனிதா தலைமையில், தமிழ்நாடு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது பணியின் போது ஓட்டுநர்களும் நடத்தினர்களும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் பேருந்து இயக்கும்போது சரியான முறையில் உள்ளதா என்பது குறித்தும் பரிசோதனை செய்த பிறகு வாகனத்தை இயக்க வேண்டும். பேருந்தில் பயணிக்கும் பயணிகள் படிக்கட்டில் தொங்கினால் அவர்களை எச்சரித்து பேருந்தின் உள்ளே செல்ல அறிவுறுத்த வேண்டும். சாலை விதிகளை பின்பற்ற வேண்டும், கவனக்குறைவோடு வாகனத்தை இயக்குதல் கூடாது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனை வழங்கினர். அதனைத் தொடர்ந்து ஓட்டுநர்கள் பல்வேறு கோரிக்கைகளை காவல்துறை அதிகாரிகளுக்கு முன் வைத்தனர் அதில் இளைஞர்கள் வாகனங்களை அதிவேகமாக இயக்குகின்றனர் ரேஸ் வாகனங்கள் அதிகம் இயக்குபவர்கள் வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் இயக்குகின்றனர் அவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர் அதேபோல் ஓட்டுநர்களும் நடத்துனர்களும் கவனத்துடன் பேருந்து இயக்க வேண்டும் பயணிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். பேருந்தின் 2 படிக்கட்டுகளும் 2 கண்கள் போன்று இருக்க வேண்டுமென ஓட்டுநர்கள், நடத்துனர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.