உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கள்ளந்திரி பகுதியில் கள ஆய்வு

மதுரை மாவட்ட ஆட்சியர் இரண்டு நாட்கள் தங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்

Update: 2024-09-19 04:55 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மதுரை மாவட்டம் "உங்களைத் தேடி. உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் மதுரை கிழக்கு வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு அரசுத் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். மதுரை மாவட்டம், கிழக்கு வட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் ஒரு நாள் வருவாய் வட்டம் அளவில் தங்கி பல்வேறு அரசுத் திட்டப் பணிகளை ஆய்வு செய்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உங்களைத் தேடி. உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஒரு நாள் வருவாய் வட்டம் அளவில் தங்கி ஒருத் திட்டப் பணிகளை ஆய்வு செய்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் பேரையூர் வட்டத்தில் அரசுத் திட்டப் பணிகளை ஆய்வு செய்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். குறிப்பாக கள்ளந்திரி பகுதியில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள வருகைபுரிந்த பொதுமக்களிடம் மருத்துவ சேவைகள் உரிய முறையில் மருத்துவப் பணியாளர்களால் வழங்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும் கள்ளந்திரி பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையின் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்பு சின்னமாங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் வகுப்பறையில் குழந்தைகளுடன் இருக்கைகளில் ஒன்றாக அமர்ந்து ஆசிரியர்கள் பாடமெடுக்கும் முறைகள் குறித்து பார்வையிட்டார். பள்ளியில் கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பது குறித்தும், பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார். தொடர்ந்து கிழக்கு வட்டம், யா. ஒத்தக்கடையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் "உங்களைத் தேடி. உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் அனைத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. மேலும் கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து, கிழக்கு வட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் இன்றிரவு தங்கி, நாளை காலையிலும் கள ஆய்வுப் பணி மேற்கொள்ள உள்ளார்கள். இந்த நிகழ்வுகளின் போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர்.மோனிகா ராணா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ர.சக்திவேல் அவர்கள் உள்ளிட்ட அனைத்துறை அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News