வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவும் கடக்கவும் வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரிக்கை

எச்சரிக்கை

Update: 2024-09-19 05:43 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து கடந்த 15ஆம் தேதி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள 1.05,002 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு முதல் போக பாசன வசதிக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது இந்த நிகழ்வில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தண்ணீர் திறந்து விடப்பட்டது வைகை அணையில் இருந்து பாசன கால்வாய் பகுதிகளுக்கு 1130 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் தற்போது அணையில் இருந்து 2099 கன அடி நீர் அதிகமாக திறக்கப்பட்டு வருகிறது அணையில் இருந்து அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர வசிக்கும் பொதுமக்கள் கரையை கடக்கவோ அதில் இறங்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை செய்துள்ளனர் வைகை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 71 அடியில் தற்போது 60.50 அடி இருக்கின்றது அணைக்கு வரும் நீர்வரத்து 880 அடியாகவும் அணையின் இருப்பு 3 ஆயிரத்து 699 அடியாக இருந்து வருகிறது

Similar News