ஏமூர் புதூரில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.
ஏமூர் புதூரில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.
ஏமூர் புதூரில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். தமிழக அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் செயல்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக அளிக்கப்படுகிறதா? என்பது குறித்து அறிய மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று, கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏமூர் புதூர் பகுதியில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, தரமான உணவுப் பொருளை கொண்டு உணவு தயாரிக்கப்படுகிறதா? உணவு தயாரிக்கும் இடம் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா? உணவு வழங்கும் இடம் சுகாதாரமாக பேணப்படுகிறதா? குழந்தைகளுக்கு தேவையான அளவு உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். இந்த ஆய்வின் போது கரூர் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர், கல்வித்துறை அதிகாரிகள், ஏமூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.