பட்டா வழங்க தாமதம் புதுகை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் காத்திருப்பு போராட்டம்!

போராட்டச் செய்திகள்

Update: 2024-09-20 03:43 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆதிதிராவிடர் நத்தம் புறம்போக்கு நிலத்துக்கான குடியிருப்பு மனைப்பட்டா வழங்குவதை தாமதப்படுத்துவதாக. கூறி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சிய அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், தீத்தானிப்பட்டியைச் சேர்ந்த ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அந்தப் பகுதியில் ஆதிதிராவிடர் நத்தம் புறம்போக்கு நிலத்தை 91 பயனாளிகளுக்கு பிரித்து, பட்டா வழங்குவதாக கடந்த 2023ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. இதற்கா பட்டாக்களை வியாழக்கிழமை வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்துள்ளனர்.ஆனால், பட்டா வழங்கப்படவில்லை எனக் கூறி அந்த மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கறம்பக்குடி ஒன்றிய இளைஞரணிச் செயலர் சிறுத்தை சிவா போராட்டத்தை ஒருங்கிணைத்தார். இந்த நிலையில், போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை விலக்கிக் கொண்டு அனைவரும் ஊர் திரும்பினர்.

Similar News