சாலையின் நடுவில் செடிகள் வெட்டி அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

தூத்துக்குடியில் சாலையின் நடுவில் உள்ள செடிகளை வெட்டி அகற்றுவதை மாநகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-09-21 10:16 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடியில் சாலையின் நடுவில் உள்ள செடிகளை வெட்டி அகற்றுவதை மாநகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகர் பகுதிகளில் பசுமையாக மாற்றுவதற்கு சாலையின் நடுவே செடிகள் வைத்து பராமரித்து வருவதற்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வாகனங்கள் வெளியேற்றும் கரும்புகையை இந்த செடிகள் உள்வாங்கி பொதுமக்களுக்கு சற்று தூய்மையான காற்றை தரும் என்ற அடிப்படையில் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் விளம்பர பலகைகள் வைப்பதற்காக சாலைகளின் நடுவே அமைக்கப்பட்டுள்ள செடிகள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. இதுகுறித்து சமூக ஆர்வலர் சிவராமன் கூறுகையில், "ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாநகரை தூய்மையாக்க பல்வேறு திட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதில் ஒன்றாக சாலையில் நடுவே தடுப்புகள் அமைத்து செடிகளை உருவாக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் வாகனங்கள் வெளியேற்றும் கரும்புகையில் இருந்து வரும் பாதிப்புகளை தடுக்கிறது. ஆனால் சில தனியார் நிறுவனங்கள் விளம்பர பலகைகள் வைப்பதற்காக செடிகளை வெட்டி வருகின்றனர். இதனால் காற்று மாசு ஏற்படும், வெப்பநிலை அதிகரிக்கும். வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும்.  எனவே செடிகளை வெட்ட மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்க கூடாது. உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

Similar News