புதிய பணியிடங்களுக்கு செல்வோர் நேர்வழியில் கடின உழைப்பு மேற்கொண்டால் முன்னேற்றம் எளிதில் கைகூடும்.! -வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணைகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் உமா அறிவுரை

மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில், 200-க்கும் மேற்பட்டோருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.மத்திய-மாநில அரசு துறைகள் இணைந்து, மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை ஆண்டுதோறும் 4 கட்டங்களாக நடத்தி வருகின்றன.

Update: 2024-09-21 11:00 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் மகேந்ரா பொறியியல் கல்லூரி வளாகத்தில், தீனதயாள் உபாத்யாய கிராமின் கவுசல் யோஜனா, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையம் உள்ளிட்டோர் இணைந்து, நடத்திய, மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில், 200-க்கும் மேற்பட்டோருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.மத்திய-மாநில அரசு துறைகள் இணைந்து, மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை ஆண்டுதோறும் 4 கட்டங்களாக நடத்தி வருகின்றன. இதன்படி, இந்த ஆண்டுக்கான முதல் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தில் உள்ள மகேந்ரா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.மத்திய அரசின் தீனதயாள் உபாத்யாய கிராமின் கவுசல் யோஜனா, நாமக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக-நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து, இந்த மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை நடத்தினர். இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு பணிக்காலியிடங்களை நிரப்ப நேர்காணல் செய்தனர்.இதில், நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த, பள்ளிக்கல்வி முடித்தோர், DIPLOMA, ITI, கலை மற்றும் பொறியியல் பட்டதாரிகள், தையல் & நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலை தேடுவோர் கலந்துகொண்டனர்.இம்முகாம் முற்றிலும் இலவசமாக நடத்தப்பட்டது.இந்த முகாமில், வேலை வாய்ப்பு பெற்ற 200-க்கும் மேற்பட்டோருக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ச. உமா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், நகரமைப்பு மண்டலத் திட்டக்குழு உறுப்பினருமான S.M. மதுரா செந்தில், மகேந்ரா கல்வி குழுமம் மேலாண் இயக்குநர் பா.அஜய் மகா பிரசாத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.தலைமை உரையாற்றி மாவட்ட ஆட்சியர் பேசுகையில்... அரசு துறைகள் சார்பில் பல்வேறு பயிற்சிகள் மற்றும் வேலை வாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. நான் முதல்வன் திட்டம் மூலம் பல்வேறு திறன் மற்றும் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படுகின்றன படித்து முடித்து, பணியிடங்களுக்கு செல்வோர் நேர்வழியில் கடின உழைப்பு மேற்கொண்டால், முன்னேற்றம் எளிதில் கைகூடும்.கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடாமல் திறன்களை வளர்த்துக் கொண்டு பணியிடங்களில் சிறந்து விளங்க வேண்டும்.மேலும் போட்டித் தேர்வுகள் எழுதி வெற்றி பெற வேண்டும். நாட்டிற்கும், குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் நல்ல குடிமக்களாக வளர வேண்டும் என்றும், தமிழ்நாடு முதல்வர் வெளிநாடு பயணம் மேற்கொண்டு தொழில் முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்தி வருகிறார் என்று மாவட்ட ஆட்சியர் பேசினார்.முன்னதாக முன்னிலை உரையாற்றி பேசிய நகரமைப்பு மண்டல திட்ட குழு உறுப்பினர் S.M.மதுரா செந்தில், தமிழ்நாடு அரசு, வெளிநாட்டு முதலீடு மூலம் 5 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளது. மேலும் 30 லட்சம் வேலை வாய்ப்புகளை அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.மாவட்ட அளவில் நடத்தப்படும் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களில் அதிக அளவிலான வேலை தேடுபவர்கள் பங்கேற்பதால் அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை தனியார் நிறுவனங்கள் மூலம் வழங்கிட அரசு ஏற்பாடு செய்து இதுபோன்ற முகாம்களை நடத்தி வருகிறது. பல்வேறு முன்னோடி திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் தேசிய அளவில் முதன்மை மாநிலமாக உள்ளது. அதேபோல மாநில அளவில் நாமக்கல் மாவட்டம் அரசன் திட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்து மாவட்டமாக உள்ளது என்றும் நகரமைப்பு மண்டலத் திட்டக்குழு உறுப்பினர் S.M.மதுரா செந்தில் பேசினார்.இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலர் பொ.மா.ஷீலா, மகேந்ரா கல்வி நிறுவனங்களின் செயல் இயக்குநர் டாக்டர் R.சாம்சன் இரவீந்திரன், தமிழ்நாடு மாநில ஊரக-நகர்புற வாழ்வாதார இயக்க நாமக்கல் மாவட்ட திட்ட இயக்குநர் கு.செல்வராசு, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சு.சுதா, வேலை நாடுநர்கள், தொழில் நிறுவனங்கள், மாணவ மாணவிகள் உள்பட படரும் கலந்துகொண்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை அவர்களின் இடத்திற்கே சென்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரா செந்தில் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News