பெருமாள்கோவில்பட்டியில் குப்பைகள் கொட்டுவதினால் நோய் பரவும் அபாயம்
பெருமாள் கோவில்பட்டி அமைந்துள்ளது இந்த கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியான மெயின் பாதையில் குப்பைகள் அதிக அளவு கொட்டப்பட்டு வருகிறது
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் பெருமாள் கோவில்பட்டி அமைந்துள்ளது .இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியான மெயின் பாதையில் குப்பைகள் அதிக அளவு கொட்டப்பட்டு வருகிறது .மேலும் இந்த குப்பைகள் கொட்டுவதினால் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் இதனால் ஊராட்சி சார்பில் தினசரி இந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என்றும் அப்பகுதியில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்