தூய்மை காவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

Update: 2024-09-21 13:18 GMT

தூய்மை காவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தூய்மையே சேவை இயக்கம் 2024. பாலாபுரத்தில் தூய்மை காவலர்களுக்கு சிறப்பு மருத்து முகாம்.




 


ஆர்.கே.பேட்டை, செப் 21. பாலாபுரம் கிராமத்தில் தூய்மை காவலர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு நடைபெற்ற மருத்துவ முகாமில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு உடல் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை பெற்றனர்.

சுகாதார ஆராய்ச்சித் துறை தூய்மையே சேவை இயக்கம், 2024-ஐ ஏற்பாடு செய்துள்ளது. இத்திட்டம் 2024, செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2, வரை கொண்டாடப்படும். இந்த தூய்மையே சேவை இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நோய்த் தடுப்பு உடல் பரிசோதனை முகாம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் பாலாபுரம் கிராமத்தில் நேற்று நடந்தது.

பாலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தென்னரசு தலைமை வகித்தார். முகாமை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி கலந்துகொண்டு தூய்மையே சேவை குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று மருத்துவ முகாமை தொடங்கிவைத்தார். இதில் சித்த மருத்துவம், இயன் முறை, ரத்த பரிசோதனை, கண் மருத்துவம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், நீர் இழிவு நோய், காசநோய் உள்ளிட்டவை தூய்மை பணியாளர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது.

மேலும் மரகன்றுகள் நடுதல், தூய்மை குறித்த விழிப்புணர்வு நடைபயணம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதில் பாலாபுரம், மகன்காளிகாபுரம், ஜனகராஜ்குப்பம், வீரமங்கலம், தாமனேரி, ஸ்ரீ காளிகாபுரம், கதன் நகரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து தூய்மை காவலர்கள், சுகாதார ஊழியர்கள் கலந்துகொண்டு பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை பெற்றனர்.

நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர், தூய்மை பாரத இயக்கம் சி.பால் ஏசடியான் ஆல் தி சில்ரன் தொண்டு அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


பட விளக்கம்:

ஆர்.கே.பேட்டை ஒன்றியம் பாலாபுரம் கிராமத்தில் தூய்மையே சேவை இயக்கம் 2024 சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நடைபெற்ற மருத்துவ முகாமை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி நேற்று தொடங்கிவைத்தார். ஆர்.கே.பேட்டை ஒன்றியம் பாலாபுரம் கிராமத்தில் தூய்மையே சேவை இயக்கம் 2024 சார்பில் விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி மற்றும் தூய்மை காவலர்கள், சுகாதார பணியாளர்கள்.

Tags:    

Similar News