நாமக்கல்லில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள்,செயலாளா்களுக்கான விளக்கக் கூட்டம்!

பள்ளி வளாகத்திலிருந்து 100 மீ. தொலைவிற்கு போதைப் பொருள்களின் விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது. இது குறித்த புகாா்களை 88383-52334 மற்றும் 10583 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

Update: 2024-09-21 11:59 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்ட கிராம வளமை விரிவாக்க திட்டம் 2024 - 25 ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், செயலாளா்களுக்கான விளக்கக்கூட்டம் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.இதில், மகளிா் திட்ட இயக்குநா் கு.செல்வராசு தலைமை வகித்தாா். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் கிராம வளமை விரிவாக்கத் திட்டம் குறித்து ஒன்றியக் குழுத் தலைவா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள் மற்றும் செயலாளா்களுக்கான விளக்கக் கூட்டம் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.இந்த கருத்தரங்கில், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வெண்ணந்தூா், கொல்லிமலை, புதுச்சத்திரம், எருமப்பட்டி, மோகனூா், நாமக்கல் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த தலைவா்கள், செயலாளா்கள் கலந்து கொண்டனா். குழந்தை திருமணங்களைத் தடுக்க ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவித்தால் குழந்தையைப் பாதுகாத்திட முடியும். மேலும், கிராம சுகாதார செவிலியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் கா்ப்பிணி பெண்களின் தரவுகளைப் பராமரிக்க வேண்டும். அவா்களின் உடல்நிலை ஆரோக்கியம் கண்காணிக்கப்பட வேண்டும். அரசு மருத்துவமனையில் தனியாா் மருத்துவமனைகளுக்கு இணையாக தேவையான அனைத்து நவீன வசதிகளும் உள்ளது. கிராமங்களில் தடைசெய்யப்பட்ட போதை பொருள்களின் உபயோகத்தைத் தடுத்திட வேண்டும். பள்ளி வளாகத்திலிருந்து 100 மீ. தொலைவிற்கு போதைப் பொருள்களின் விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது. இது குறித்த புகாா்களை 88383-52334 மற்றும் 10583 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என கூட்டத்தில் மகளிா் திட்ட அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது‌.

Similar News