கன்னியாகுமரியில்  கலங்கரை விளக்க தின கொண்டாட்டம் 

இன்று அனுமதி இலவசம்

Update: 2024-09-21 12:11 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கன்னியாகுமரி புதிய பேருந்து நிலையத்துக்கு செல்லும் கோவளம் சாலையில் கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. இந்த கலங்கரை விளக்கம் தரை மட்டத்தில் இருந்து 150 மீட்டர் உயரத்திலும், கடல் மட்டத்திலிருந்து 180 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது. கடற்கரைப் பகுதியில் இருந்து 30 மீட்டர் தொலைவுக்கு நன்றாக வெளிச்சம் தெரியும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் பகுதிக்கு ஏறிச்செல்வதற்கு வசதியாக மொத்தம் 139 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில், பாதுகாப்பு இல்லாததால் 2008-ம் ஆண்டு வரை சுற்றுலாப் பயணிகள் கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதிக்குச் சென்று பார்க்க அனுமதிக்கபடவில்லை. 2008-ம் ஆண்டுக்கு பிறகே சுற்றுலா பயணிகள் கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதிக்குச் சென்று பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.       ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 21-ம் தேதி கலங்கரை விளக்க தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (சனிக்கிழமை) நிலைய அதிகாரி பிரகாஷ் தேசியகொடி மற்றும் கலங்கரை விளக்க துறையின் கொடி ஏற்றி  மரியாதை செலுத்தினார். இதில் நிலைய ஊழியர்கள் கலந்து கொண்டனர். தெடர்ந்து தூய்மை பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மேலும் கலங்கரை விளக்க தினத்தையொட்டி கன்னியாகுமரி கலங்கரை விளக்கத்தை சுற்றுலா பயணிகள் இன்று ஒரு நாள் மட்டும் கட்டணமின்றி பார்வையிட அனுமதித்தனர்.

Similar News