ஆரணியில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு பெருமாள் கோயில்களின் சிறப்பு பூஜை.

ஆரணி, செப்.22 புரட்டாசி சனிக்கிழமை முன்னி்ட்டு ஆரணி பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது

Update: 2024-09-22 04:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆரணி நகரில் சார்ப்பனார் பேட்டை பகுதியில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு அதிகாலையிலேயே சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு , திருப்பதி ஏழுமலையானை போல கருவறையில் உள்ள வரதராஜரை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, நாராயணா என கோஷத்தோடு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். காலை முதல் இரவு வரை தொடர்ந்து பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது . இதேபோல ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ அலர்மேலு மங்கை சமேத சீனிவாச பெருமாள் கோவிலிலும், ஆரணி-தச்சூர் சாலையில் உள்ள கோதண்டராமர் கோவிலிலும் , சத்தியமூர்த்தி சாலையில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் கோவிலிலும் , எஸ்.வி. நகரம் பகுதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள் கோவிலிலும் , இரும்பேடு ஏ.சி.எஸ். நகரில் உள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலிலும் புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடத்தி மகா அலங்காரம், மகா தீபாராதனையுடன் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

Similar News