நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பனை மர விதை நடும் நிகழ்ச்சி மற்றும் உலக ஓசோன் தின நிகழ்ச்சி!

மாவட்ட வன அலுவலர் கலாநிதி பனை மரங்களின் பயன்கள் குறித்தும் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பனைமர பங்கினை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.

Update: 2024-09-23 12:16 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பனை மர விதை நடும் நிகழ்ச்சி மற்றும் உலக ஓசோன் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் இராஜா தலைமை வகித்து பேசுகையில் ஓசோன் படலம் குறித்தும் எவ்வாறு ஓசோன் படலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.சிறப்பு விருந்தினராக மாவட்ட வன அலுவலர் கலாநிதி கலந்து கொண்டு பனை மரங்களின் பயன்கள் குறித்தும் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பனைமர பங்கினை குறித்தும் எடுத்துரைத்தார்.மேலும் ஓசோன் படலம் பாதுகாப்பதன் அவசியம் குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. கல்லூரி விரிவாக்க அமைப்புகளான யூத் ரெட் கிராஸ், செஞ்சுருள் சங்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப் பணி திட்டம், சுற்றுச்சூழல் மன்றம், பசுமை மன்றம் மற்றும் உள்தர உறுதி மையம் ஆகியவை இணைந்து பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட பனை விதைகளை விதைக்கும் பணியை மாவட்ட வன அலுவலர் கலாநிதி, மாவட்ட பசுமை இயக்கம் தொடர்பு அலுவலர் ராஜேஷ் கண்ணன், பசுமை களப்பணியாளர் கிஷோர் ஆகியோர் முன்னிலையில் கல்லூரி வளாகத்தில் பனை மர விதைகள் விதைத்து தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

Similar News