தமிழக அரசு சார்பில் சைகை மொழி தின விழா: எம்பியிடம் கோரிக்கை
தமிழ்நாடு முழுவதும் அரசு சார்பில் சைகை மொழி விழிப்புணர்வு வார விழா நடைபெற வேண்டும் என்று காதுகேளாதோர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அரசு சார்பில் சைகை மொழி விழிப்புணர்வு வார விழா நடைபெற வேண்டும் என்று காதுகேளாதோர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பு துணைத் தலைவர் மெய்கண்டன் கனிமொழி எம்பி அமைச்சர் கீதாஜீவன், ஆகியோரை சந்தித்து அளித்த மனுவில், "அரசு செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் குறைவுடைய பள்ளியில் சில ஆசிரியர்கள் சைகை மொழி சான்றிதழ் பெறாமல் முறைகேடாக ஆசிரியர் பணிக்கு சேர்ந்து உள்ளனர். சைகை மொழி சான்றிதழ் பெற்றவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி வழங்க வேண்டும். சைகை மொழி சான்றிதழ் பெறாமல் உள்ள ஆசிரியர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.செப்டம்பர் மாதம் சைகைமொழி தினம் மற்றும் காதுகேளாதோர் தின விழாவை அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடத்தப்பட வேண்டும். எந்த ஒரு மாவட்டமும் விடுபடாமல் சைகை மொழி தினவிழா நடத்தப்படவேண்டும். சைகைமொழி தின விழா மற்றும் காதுகேளாதோர் தின விழாவை முன்னிட்டு அரசு தனியார் செவித்திறன் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணியாற்றும் குறைவுடைய ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் சர்வதேச காது கேளாதோர் தினவிழா மற்றும் சைகை மொழி விழிப்புணர்வு வார விழா நடைபெற வேண்டும். ஆகவே இந்த சைகை மொழி தின விழா நடத்த எங்களுக்கு அனுமதி வழங்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.