மூளை சாவு அடைந்த உடல் தானம்: அவரது உடலுக்கு அரசு மரியாதை!

தூத்துக்குடி சாலை விபத்தில் படுகாயம் அடைந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை சாவு அடைந்த சந்தனராஜ் என்பவரது உடல் உறுப்புகளான கண் மற்றும் தோல் ஆகியவை தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சந்தனராஜ் உடலுக்கு அமைச்சர் கீதா ஜீவன் மரியாதை செலுத்தினர்.

Update: 2024-09-24 12:17 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி சாலை விபத்தில் படுகாயம் அடைந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை சாவு அடைந்த சந்தனராஜ் என்பவரது உடல் உறுப்புகளான கண் மற்றும் தோல் ஆகியவை தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சந்தனராஜ் உடலுக்கு அமைச்சர் கீதா ஜீவன் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மருத்துவர்கள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் மலர் வளையும் மலர் தூவி மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினர் தூத்துக்குடி சுந்தரவேல் புரம் பகுதியல சேர்ந்தவர் சந்தனராஜ் கார்பென்டர் இவர் கடந்த 21 ஆம் தேதி புதுக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் வரும் போது ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயம் அடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் மூளை சாவு அடைந்த சந்தனராஜின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர் இதைத்தொடர்ந்து சந்தன ராஜன் கண்கள் மற்றும் அவரது தோல் ஆகியவை உடலுறுப்பு தானத்திற்காக வழங்கப்பட்டு திருநெல்வேலி மற்றும் மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கொண்டு செல்லப்பட்டது இவ்வாறு உடல் உறுப்பு தானம் செய்த சந்தன ராஜின் உடலுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைச்சர் கீதா ஜீவன் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி நகர துணை கண்காணிப்பாளர் மதன் மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்தும் மலர் தூவியம் அஞ்சலி செலுத்தினர் பின்னர் அவரது உடல் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் இறுதிச் சடங்கிற்காக அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து சந்தன ராஜின் உடல் கொண்டு செல்லப்படும் போது மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருபுறமும் நின்று மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் செவிலியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

Similar News