கஞ்சா விற்பனை செய்த நான்கு பேர் கைது!
கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த நான்கு பேர் கைது - 6கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஐயப்பன் கோவில் அருகே உள்ள அணுகு சாலையில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஸ்டீபன் தலைமையில் தனிப்பிரிவு காவலர்கள் தலைமைக் காவலர் முத்துமாரி, முதல் நிலை காவலர் செசிலின் வினோத், காவலர் முத்துராமலிங்கம், காவலர் அருணாச்சலம் ஆகியோர் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் இருந்த போது அந்தப் பகுதியில் டாட்டா ஏசி வாகனத்தில் சத்தியமூர்த்தி என்ற இளைஞர் கஞ்சா புகைத்து கொண்டிருப்பதை பார்த்து அவரை பிடித்து விசாரித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மேட்டு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகையா மகன் சத்தியமூர்த்தி (20) என்பதும் , கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து சத்தியமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் பெயரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சீனிவாச நகரை சேர்ந்த கணேசன் மகன் பாலாஜி (29), வ உ சி நகரைச் சேர்ந்த கணபதி மகன் சுப்பிரமணி (27), மேட்டுக்காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகாயை மகன் காளீஸ்வரன் (24) ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமிருந்து 6 கிலோ 500 கிராம் கஞ்சாவினை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இரு டாடா ஏசி வாகனங்கள், ஒரு பைக் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து கோவில்பட்டி மது விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்