நெல்லை பேருந்தில் நேற்று பயணித்த பாத்திமா என்ற பெண் தனது செல்போனை தவற விட்டுள்ளார். இது குறித்து வண்ணார்பேட்டை போக்குவரத்து காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து காணாமல் போன செல்போனை ஒரு மணி நேரத்தில் மீட்டு அந்த பெண்ணிடம் வழங்கினர். இந்த நிகழ்வின் போது உதவி பெண் காவலர் மஞ்சு, நடத்துனர் உடன் இருந்தனர்.