சத்தி நகராட்சி பொது இடத்தில் குப்பை கொட்டினால் அபராதம்

சத்தி நகராட்சி பொது இடத்தில் குப்பை கொட்டினால் அபராதம்

Update: 2024-09-26 07:46 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சத்தி நகராட்சி பொது இடத்தில் குப்பை கொட்டினால் அபராதம் சத்தி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வார்டுகளில் உள்ள வீடு, கடை, ஓட்டல்களில் இருந்து தினசரி எலெக்ட்ரிக் வாகனங்கள் மூலம் நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை பெற்று அத்தானி ரோட்டில் உள்ள குப்பைக் கிடங்கிற்கு எடுத்து செல்கின்றனர். பொதுமக்கள் சிலர் குப்பைகளை ஊழியர்களிடம் கொடுக்காமல் பொது இடங்களில் வீசி செல்கின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், மற்றவர்களும் இதே போல் செய்தால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என அப்பகுதி பொது மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதையடுத்து பொது இடங்களில் குப்பை வீசி செல்பவர்களை நகரில் நிறுவப்பட்டுள்ள கண்கானிப்பு கேமராக்கள் மூலம் கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதால் நடவடிக்கை தொடரும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News