செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி தலைமையில் கோயில் நிலத்தினை ஆய்வு செய்யும் பணி
ஆரணி, 26 திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம் திருக்கோயில்களுக்கு சொந்தமான இடங்கள் அதிகமாக உள்ளன. இவற்றில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையர் உத்தரவுப்படி இடங்கள் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம் திருக்கோயில்களுக்கு சொந்தமான இடங்கள் அதிகமாக உள்ளன. இவற்றில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையர் உத்தரவுப்படி இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, ஆக்கிரமிப்புகள் கண்டறியும் பணி நடந்து வருகிறது. இதில் இந்து சமய அறநிலைக்கு துறைக்கு சொந்தமான கடுகனூர் கிராமத்தில் உள்ள அ.மி கைலாசநாதர் திருக்கோயிலில் மொத்த சுமார் 4 ஏக்கர்12 சென்ட் உள்ளது. செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி அவர்கள், தலைமையில் கோயில் நிலத்தினை ஆய்வு செய்யும் பணி ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர்கள் திருநாவுக்கரசு, சுப்ரமணியன் ஆய்வர் முத்துசாமி, நில அளவர்கள் சின்னராஜா, சிவக்குமார், திருக்கோயில் உதவியாளர் கார்த்தி, கிராம நிர்வாக அலுவலர் தமிழ்மணி, கிராம உதவியாளர், திருக்கோயில் நிர்வாகிகள், பணியாளர்கள் அடங்கிய குழுவினர் நேற்று முதல் கட்டமாக 3 ஏக்கர் 56 சென்ட் நிலத்தினை நவீன தொழில்நுட்ப (DGPS) கருவியின் மூலம் அளவீடு செய்யப்பட்டது.