காரைக்குடியில் இந்திய அளவிலான மகளிர் காண செஸ் போட்டி நடைபெற உள்ளது
காரைக்குடியில் இந்திய அளவிலான மகளிர் காண செஸ் போட்டி வரும் மூன்றாம் தேதி துவங்கி 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது
காரைக்குடியில் இந்திய அளவிலான மகளிர் காண செஸ் போட்டி வரும் மூன்றாம் தேதி துவங்கி 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் ஆதரவுடன் தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் மற்றும் அனைத்திந்திய சதுரங்க கழகம் நடத்தும் ஐம்பதாவது தேசிய மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் 2024 வருகின்ற அக்டோபர் மாதம் மூன்றாம் தேதியிலிருந்து 13 ஆம் தேதி வரை காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் நடைபெற இருப்பதை ஒட்டி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழ்நாடு செஸ் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் அனந்தராமன் பள்ளித் தாளாளர் குமரேசன் ஆகியோர் வரும் அக்டோபர் 3 தேதி முதல் 13 தேதி வரை மகளிர்க்கான தேசிய அளவிலான செஸ் போட்டி காரைக்குடியில் செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் நடைபெற உள்ளதாகவும் இந்த போட்டியில் முதல் பரிசாக வெற்றி பெறும் வீராங்கனைக்கு 7 லட்ச ரூபாயும் இரண்டாம் பரிசாக 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் மூன்றாம் பரிசாக 4லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 30 லட்ச ரூபாய் பரிசு தொகையை வழங்கப்பட உள்ளதாகவும் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலிருந்தும் புகழ்பெற்ற செஸ் வீராங்கனைகள் பங்கு பெற இருப்பதாகவும் அந்தந்த மாநிலங்கள் பரிந்துரை செய்யும் வீராங்கனைகள் மட்டும் இந்த போட்டியில் பங்கு பெற உள்ளதாகவும் இதுவரை 133 வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்க பதிவு செய்துள்ளதாகவும் 150 பேர் வரை இந்த இந்திய அளவிலான செஸ் போட்டியில் பங்கு பெறலாம் என்றும் தெரிவித்தனர்