திருநெல்வேலி மாவட்டம் குன்னத்தூர் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பில் இன்று கடந்த ஆண்டு பெய்த மழையின் பெரு வெள்ளத்தில் மண்ணரிப்பு ஏற்பட்ட இடங்களில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் பகுதிகளில் உள்ள மண் குவியல் சமதளப்படுத்தப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையா பாண்டியன் செய்திருந்தார்.