கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்குஆரணி வேளாண்மை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

ஆரணி, செப் 27. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்குஆரணி வேளாண்மை அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்

Update: 2024-09-27 07:28 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்குஆரணி வேளாண்மை அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர். திமுக அரசு தேர்தல் அறிக்கையில் விதை நெல் இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் 78 வது எண்ணி்ல் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை இலவசமாக விதை நெற்களை வழங்கவில்லை, மேலும் தேர்தல் அறிக்கை 464 ல் கிராமப்புற மேம்பாடு நிதியம் உருவாக்கப்பட்டு டெண்டர் பணிகளை கிராம ஊராட்சிகளே மேற்கொள்ள பஞ்சாயத்து சட்டம் வழிவகை செய்தும் மாநில அரசு விதிகளை மீறி வருகிறது. மேலும் உயர்நீதிமன்றமே கிராம டெண்டர்களை ஊராட்சிமன்றதே தீர்மானிக்க அறிவுறுக்கிறது. இதனை நடைமுறைப்படுத்தாத தமிழக அரசை கண்டித்தும் மேற்குஆரணி வேளாண்மை அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தினை சேர்ந்த விவசாயிகள் காதில் பூ வைத்துக்கொண்டும், கோவிந்தா போட்டும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மாவட்ட தலைவர் வாக்கடை புருஷோத்தமன் தலைமை தாங்கினார். மாவட்டதுணைத்தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார். மேலும் இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Similar News