தாராபுரம் சட்டவிரோத கிராவல் மண் கடத்தலை தடுக்க கோரி அதிமுகவினர் ஆர்.டி.ஒ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
தாராபுரம் சட்டவிரோத கிராவல் மண் கடத்தலை தடுக்க கோரி அதிமுகவினர் ஆர்.டி.ஒ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
தாராபுரம் சட்டவிரோத கிராவல் மண் கடத்தலை தடுக்க கோரி அதிமுகவினர் ஆர்.டி.ஒ அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தாராபுரம் பகுதியில் சட்ட விரோதமாக பர்மிட்டில்லாமல் கிராவல் மண் கடத்தப்படுவதாக கூறி அதிமுகவினர் ஆர்.டி்.ஒ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.ஆர்.டி.ஒ செந்தில்அரசனிடம் அதிமுக ஒன்றிய செயலாளர் பாலகுமாரன்,நகரசெயலாளர் ராஜேந்திரன்,கொளத்துபாளையம் பேருர் கழக செயலாளர் பைப் ரவி உள்பட நிர்வாகிகள் அளித்த மனுவில்கூறப்பட்டுள்ளதாவது, தாராபுரம் பகுதியில் சட்ட விரோதமாக பர்மிட் இன்றி கிராவல் மண் இரவு பகலாக கடத்தப்படுகிறது.அதிக வேகமாக செல்லும் கிராவல் மண் லாரிகளால் பொது மக்களுக்கு உயிர் பாதுகாப்பில்லை. இதை தட்டி கேட்டால் தாக்க முயலுகிறார்கள்.எனவே சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் முன்பு பொதுமக்கள் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்த்து.மனுவை பெற்றுக் கொண்ட ஆர்.டி.ஒ செந்தில்அரசன் விவசாய பணிக்காக சங்கரண்டாம்பாளையம்,நல்லதங்காள் அணை பகுதியில் பர்மிட் வழங்கப்பட்டுள்ளது.காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை மட்டுமே பர்மிட்டுடன் மண் எடுக்க பர்மிட் வழங்கப்பட்டுள்ளது.விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி கூறினார்.இதை ஏற்று அதிமுகவினர் கலைந்து சென்றனர்