பொதுமக்களின் நலன் கருதி தெரு நாய்களை கட்டுப்படுத்த தெருநாய்கள் பிடிக்கப்பட்டது
பொதுமக்களின் நலன் கருதி தெரு நாய்களை கட்டுப்படுத்த தெருநாய்கள் பிடிக்கப்பட்டது
பொதுமக்களின் நலன் கருதி தெரு நாய்களை கட்டுப்படுத்த தெருநாய்கள் பிடிக்கப்பட்டது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 30 வார்டுகளிலும் அதிக அளவில் தெரு நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து இரவு நேரங்களிலும் இரு சக்கர வாகனத்தில் பொதுமக்கள் செல்ல முடியாத அளவிற்கு தெரு நாய்கள் பல்வேறு வார்டு பகுதிகளில் சுற்றித் திரிகிறது. பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக தெரு நாய்களை பிடிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் தாராபுரம் நகராட்சி சார்பாக பொதுமக்களின் நலன் கருதி தெரு நாய்களை கட்டுப்படுத்த சுற்றும் திரியும் தெருநாய்கள் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற தாராபுரம் நகர் மன்ற தலைவர் பொறியாளர் கு.பாப்பு கண்ணன் தலைமையில் ,நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் முன்னிலையில் , 19 ஆவது வார்டு பகுதியில் பொதுமக்களுக்கு தொந்தரவு செய்த நாய்களை இன்று பிடித்து அப்புறப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன் , 19வது வார்டு நகர மன்ற உறுப்பினர் புனிதா சக்திவேல் , நகராட்சி சுகாதார அலுவலர் மணிகண்டன் , நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வகுமார் , நகராட்சி குடிநீர் மேற்பார்வையாளர் பிரபாகரன், நகராட்சி மின்சார பிரிவு செல்வராஜ் , ஜெயபால் , மற்றும் 19 ஆவது வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.