சேவூர் அரசு பள்ளியில் நாட்டு நலப் பணி திட்டம் முகாம்.
ஆரணி அடுத்த சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகளின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்.
ஆரணி அடுத்த சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகளின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடங்கியது. இதில் ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.ராமச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கலைவாணி அனைவரையும் வரவேற்றார். சேவூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் க.முருகன் வாழ்த்துரை வழங்கினார். அப்போது உடன் அதிமுக ஒன்றிய செயலாளர் ஜெயப்பிரகாஷ், ஆரணி நகர செயலாளர் அசோக்குமார், நகர மன்ற உறுப்பினர்கள் குமரன், முன்னாள் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் பாலசந்தர், முன்னாள் ஊராட்சி தலைவர் பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இம்முகாம் சனிக்கிழமை துவக்கப்பட்டு அக்டோபர் 4 வரை நடைபெறுகிறது. இதில் மரக்கன்றுகள் நடுதல், நவீன அரிசி ஆலை பார்வையிடல், கண் தான விழிப்புணர்வு மனித சங்கிலி, ஜைனர் கோயில் உழவாரப்பணி என பல்வேறு நலதிட்ட பணிகள் நடைபெற உள்ளது.