சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு மறியல்

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு மறியல் திண்டுக்கல்லில் 150 பேர் கைது

Update: 2024-10-01 11:48 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சென்னை சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக திண்டுக்கல்லில் சிஐடியு மத்திய சங்க தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு 150 பேர் கைதானார்கள். அது பற்றிய விவரம் வருமாறு. சாம்சங் தொழிலாளர்கள் சங்கம் வைக்கும் உரிமை கோரி போராடி வருகிறார்கள். அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். தொழிற்சங்க உரிமை, ஜனநாயக உரிமைகளை பறிக்கும் காவல்த்துறையின் நடவடிக்கையை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்;தியும், சாங்சங் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்தும், அந்த தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் திண்டுக்கல்லில் சிஐடியு தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். செவ்வாயன்று பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜே.பி.ஹோட்டல் அருகில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்டத்திற்கு சிஐடியு திண்டுக்கல் மாவட்டத்தலைவர் கே.ஆர்.கணேசன் தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் கே.பிரபாகரன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் தவக்குமார், வெங்கிடுசாமி, பாண்டியன், சி.பி.ஜெயசீலன், அழகர்சாமி, ஏ. பிச்சைமுத்து, மனோகரன், கே.பிச்சைமுத்து, பாலச்சந்திரபோஸ் ஆகியோர் உள்ளிட்ட 150 பேர் கைதானார்கள்.

Similar News