திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ட ஊசி வளைவுகளை கொண்டதாகும். இந்த மலைப்பாதை தமிழக - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழித்த டமாக திகழ்கிறது. இந்த வழித்தடத்தில் வனவிலங்குகள் வாக னத்தில் மோதி உயிரிழப்பதாக கூறி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, கடந்த 2022-ம் ஆண்டு திம்பம் மலைப்பாதை வழியாக தினமும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக் குவரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து இந்த தடை அமல்படுத்தப்பட்டது. அதன் படி பண்ணாரி சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை வாகனங் கள் தடுத்து நிறுத்தப்பட்டன. காலை 6 மணிக்கு பிறகே வாக னங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இருபுறமும் நின்ற வாகனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் முன்நோக்கி செல்ல முயன்றன இதனால் திம்பம் மலைப்பா தையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். காலை 10 மணிக்கு பிறகே போக்குவரத்து சீரானது. இதனால் திம்பம் மலைப்பாதையில் சுமார் மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.