கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு கணினி மூலம் மருத்துவச்சான்று வழங்குவதற்கு பயிற்சி முகாம் துவங்கியது.கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடந்த பயிற்சி முகாமை மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி தலைமை தாங்கி துவக்கினார். மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு மருத்துவர்களுக்கு, டாக்டர் சிவராமன் இணையதளம் வழியாக மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீடு சான்றிதழ் வழங்கும் முறை குறித்து விளக்கப்பட்டது. தொடர்ந்து வலைதளத்தில் மருத்துவர் மதிப்பீட்டின் சான்றின் பெயரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பதிவு எண் கொண்ட தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள கணினி செயலிக்கான பயிற்சி வகுப்புகள் இரண்டு நாட்களுக்கு நடக்கிறது. இணை இயக்குனர் அன்புமணி மற்றும் மாற்றுத்திறனாளி நல அலுவலர்கள், மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.