உடுமலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் பென்ஷன் தொழிலாளர் மாவட்ட மாநாடு
முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கட்டுமான தொழிலாளர் பென்சன் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட மாநாடு மாநில தொழிற்சங்க அமைப்பாளர் குணசேகரன் தலைமையில் உடுமலை குட்டைத்தடல் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலம் தொடங்கியது ஊர்வலம் காவல் நிலையம் பூர்வீக பள்ளிவாசல் தளி ரோடு வழியாக பசுபதி வீதியில் உள்ள திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது. பின்னர் மாநாட்டில் மாநில செயலாளர் பாஸ்கரன் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் பாலன் சிறப்புரை ஆற்றினர் பின்னர் செய்தியாளர்களிடம் மாநில செயலாளர் பாஸ்கரன் கூறும் பொழுது... பென்ஷன் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை ரூ 3000 வழங்க வேண்டும் , தொழிலாளர்களுக்கு இயற்கை மரண உதவி தொகை ரூ 25 ஆயிரம் வழங்க வேண்டும் தொழிலாளர்களுக்கு இலவச வீடு கட்டும் திட்டம் அமல்படுத்த வேண்டும், தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் ,மற்றும் தமிழகத்தில் தற்சமயம் போதை பொருள் விற்பனை அதிகரித்து இருப்பதால் பள்ளி கல்லூரி அருகில் மதுபான கடைகளை மூட வேண்டும், கணக்கம்பாளையம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க கூடாது மற்றும் தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றதற்கு வாழ்த்துக்கள் மேலும் மேலும் பல நல்ல திட்டங்கள் கொண்டு வர வேண்டும் ,இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி இருப்பதற்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவிக்கின்றது. மேலும் இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு செல்லும் பொருட்களும் நிறுத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்தார். திருப்பூர் மாவட்ட செயலாளர் மூர்த்தி மாநில குழு உறுப்பினர் அப்பாஸ் ,தொழிற்சங்க நிர்வாகி பால் நாராயணன் தொழிற்சங்க அமைப்பாளர் சுந்தர்ராஜ் மகளிர் அமைப்பாளர் வைதேகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்