காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டம்*
முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சிலைமான், சாமநத்தம் மற்றும் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் கொந்தகை, காஞ்சிரங்குளம், முக்குடி உள்ளிட்ட ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர்கள் சையத்அலிபாத்திமா சாகுல்ஹமீது,ராஜலட்சுமிஅழகர்சாமி, தீபாஜெயவேல், மல்லிகாராஜாமணி, முத்தையா ஆகியோர் தலைமையில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் ஜுனைதாபேகம் தனசேகரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம் 2024 25 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை தூய்மையான குடிநீர் வழங்குவதை உறுதி செய்தல் ஜல் ஜீவன் இயக்கம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டது.இந்த கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் சுரேஷ், கண்ணன், பாண்டுரங்கன், சுரேஷ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,ஒன்றிய கவுன்சிலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய் ஆய்வாளர் வார்டு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்